Functions of community


ச்சமுதாயமானது தனக்கென்று சில வரையறைகளை கொண்டு செயல்பட்டு வருகின்றதுஅந்த அடிப்படையில் நோக்கும் போது பெரும்பாலான மக்கள் தேயிலை தோட்டங்களில் வேலை செய்கின்ற போதிலும் தங்களது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவதில் ஆர்வமாக உள்ளனர்இதன் காரணமாக இச்சமுதாய மக்களுக்கு என்று தனிப்பட்ட பாடசாலைகள் ஏதும் இல்லாத போதும் தொலைவில் இருக்கும் அயல் பாடசாலைகளுக்கும் நகரத்தில் உள்ள பாடசாலைகளுக்கும் தங்களது தகுதிகளுக்கும் மீறியும் பணம்  செலுத்தி தமது பிள்ளைகளை கல்வி கற்க செய்வது பாராட்டத்தக்க விடயமாகும்.

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வைத்திருக்கும் தேயிலைத் தோட்ட தாய்மார்கள் தங்களது பிள்ளைகளை பிள்ளைகள் காப்பகம் என்று அத்தோட்டத்திலேயே இயங்கி வரும் அமைப்பில் ஒப்படைத்து விட்டு வேலை முடித்து வரும்போது அவர்களை வீடுகளுக்கு அழைத்துச் செல்வது ஒரு வழக்கமாக காணப்படுகிறது.

மேலும் இப்பிரதேசத்தின் சில தேயிலைத் தோட்டங்களை பகுதி பகுதியாக பிரித்து அங்குள்ள தேயிலை தோட்ட சமுதாயத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு பிரித்து வழங்கப்பட்ட பகுதியில் காணப்படும் தேயிலைச் செடிகளை பராமரித்தல் பாதுகாத்தல் போன்ற செயற்பாடுகள் இச்சமுதாயத்தினரால் மேற்கொள்ளப்படுகின்றது. தேயிலை இலைகளை பறிப்பதற்கான முழு உரிமையும் இவர்களிடம் காணப்படுகின்றது. எந்த நிறுவனத்திற்கு அவற்றை விற்க வேண்டும் என்ன விலையில் விற்க வேண்டும் என்பவற்றை முடிவு செய்யும் அதிகாரம் கூட இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வழங்கப்பட்ட பகுதி சிறியதாக இருந்தாலும் வேலை முடிந்ததும் இவர்களது சொந்த தேயிலை பகுதிகளுக்குச் சென்று அவற்றை பராமரித்து உரிய நேரத்தில் தேயிலையை பறித்து அவற்றை விற்பனையும் செய்கின்றனர் இதன் மூலம் இவர்கள் வருமானமும் ஈட்டி கொள்கின்றனர்.

 

மேலும் இச்சமுதாயத்திலே காணப்படும் சற்று வசதி படைத்தவர்கள் இன்னொருவரது தேயிலைக் காணியையும் விலைக்கு வாங்கி அதிலும் இவர்கள் வருமானம் ஏற்றுக் கொள்வதோடு வேலைக்கு ஆள் வைத்தும் சில சமயங்களில் தேயிலை பறிப்பது காணப்படுகின்றது.

பெண்கள் தேயிலை பறிக்கும் வேலைகளில் ஈடுபட ஆண்கள் தேயிலை தோட்டத்தை சுத்தம் செய்தல் களைகளை அகற்றுதல் மரம் நாட்டுதல் அழகு படுத்தல் போன்ற வேலைகளில் ஈடுபடுவர். அதிகமான தேயிலை பறிக்க வேண்டி இருப்பேன் ஆண்களும் தேயிலை பறித்தலில் ஈடுபடுவர். 

காலை 8 மணிக்கு புறப்பட்டு அன்றைய நாள் வேலை செய்யும் இடத்திற்கு சென்று எட்டு கிலோகிராம் தேயிலையை காலை 11 மணிக்கு முன்பாக பறித்து முடித்தல் வேண்டும் 11 தொடக்கம் 11. 30 வரை  தேநீர் விடுமுறை கிடைக்கும் அதன் பிறகு மீண்டும் வேலையை தொடங்க வேண்டும். மீண்டும் 8 கிலோகிராம் தேயிலை மாலை 4 மணிக்கு முதல் படித்து முடிக்க வேண்டும் மொத்தமாக சேர்த்து ஒரு நாளைக்கு 16 கிலோ கிராம் என எடை போட வேண்டும் அப்போதுதான் அன்றைய நாள் ஆயிரம் ரூபாய் ஊதியம் கிடைக்கும் இல்லையென்றால் 600 மட்டுமே கிடைக்கப்பெறும்.

இச்சமுதாய மக்கள் தம் வாழும் சூழலையும் நேசிக்கக் கூடியவர்களாக உள்ளனர். சூழலை அழகாக வைத்திருத்தல் தேயிலை தோட்டங்களை கிழமைக்கு ஒரு நாள் துப்புரவு செய்தல் புல் புடுங்குதல் குப்பைகளை எரித்தல்  கோயில் சிரமதான பணிகளில் ஈடுபடுதல் போன்ற செயற்பாடுகளும் இச்சமுதாயத்தினரால் மேற்கொள்ளப்படுகின்றது.

மேலும் கோயில் கட்டுமான பணிக்காக பணம் திரட்டப்படுவதால் மாதத்தில் இரண்டு முறை அல்லது மூன்று முறை என தேயிலை பறிக்கப்பட்டு அன்றைய நாள் பறிக்கப்படும் தேயிலைக்கான பணம் ஆலயத்திற்கு வழங்கப்படுகிறது இது இச் மேற்கொள்ளப்படும் மற்றும் ஒரு செயல்பாடாக காணப்படுகின்றது.

மேலும் கிறிஸ்தவம் இந்து பௌத்தர்கள் என்று பல்வேறு மதத்தவர்கள் காணப்படுகின்ற போதிலும் இவர்கள் தொழிலின் அடிப்படையில் ஒரே சமுதாயமாக காணப்படுவதால் மலை தெய்வம் என்று கூறப்படும் கிராமிய தெய்வ வழிபாடு மிகவும் சிறப்பாக வருடந்தோறும் தை முதலாம் இரண்டாம் திகதிகளிலும் கொண்டாடப்படுகின்றது. இந்நிகழ்வின் போது அத்தோட்ட முகாமையாளர் , உதவி முகாமையாளர் , கணக்குப்பிள்ளை , கங்காணி பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொள்ளுவர்.

மேலும் இங்கு உள்ள இளைஞர் ஒன்றிணைந்து கழகம் ஒன்று உருவாக்கி அதன் மூலமும் இச்சமுதாயத்தை பிரதிபலிக்கும் வகையில்  பல்வேறு செயற்கிட்டங்களையும் மேற்கொள்கின்றனர்எடுத்துக்காட்டாக இங்கு காணப்படும் ஒரு ஆலயமானது கட்டப்படாத நிலையில் காணப்படுகின்ற போதிலும் அரசாங்கத்திடம் உதவி கோரிய போதிலும் எவ்வித உதவியும் கிடைக்கப் பெறாத சந்தர்ப்பத்தில் பொதுமக்களிடம்

மாதந்தோறும்
 வரி வசூலித்து ஏனைய வெளி மாவட்டங்களிலோ வெளி நாடுகளிலோ தொழில் புரியும் இளைஞர் யுவதிகளிடம் சிறு தொகை பணத்தை சேர்த்து இவ்வாலயமானது கட்டப்பட்டு வருகின்றது.

இதைவிட திருமண நிகழ்வுகள் வேறு மங்கள சடங்குகள் இடம்பெறும் வீடுகளில் அனைவரும் ஒன்றித்து ஒற்றுமையாக உதவிகளை செய்து கொள்வதோடு அதேசமயம் மரண வீடுகள் போன்றவற்றிலும் கலந்து கொண்டு அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து அவர்களுடன் ஒரு குடும்பமாக வாழும் வழக்கம் இங்கு காணப்படுகிறது ஒருவருடைய கஷ்டத்தில் இன்னொருவர் பங்கெடுத்துக் கொண்டு வேற்றுமையின்றி ஒரே சமுதாயமாக வாழ்கின்றனர்.

இயற்கையாகவே இப்பிரதேசமானது மிகவும் இயற்கை எழில் மிகுந்ததாக காணப்படுவதால் இங்கு அடிக்கடி சுற்றுலாப் பயணிகள் வருவதும் வழக்கமாகிறது இதன் காரணமாக சுற்றுலா விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளது அவற்றில் பெரும்பாலும் இச்சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்கள் வேலை செய்கின்றனர். அவ்வாறு சுற்றுலாவிற்கு வரும் வெளிநாட்டவருக்கு ஊரை சுற்றிக்காட்டுதல் தோனி ஓட்டுதல் தமது வாகனங்களை அவர்களது போக்குவரத்துக்காக பயன்படுத்துதல் போன்றவற்றின் மூலமாக பணம் உழைத்து அதன் மூலமும் தமது வறுமையை‌ போக்கிக் கொள்கின்றனர்.